Monday, February 15, 2016

என் தேடலில் ஒரு சிறு அறிமுகம்

என் தேடலில் ஒரு சிறு அறிமுகம் 


          வித்தியசமாக , மாறுப்பட்டதக , மற்றசெயல்களில்யிருந்து வேறுபாடு கொண்ட செயல் என்பது என் தேடுதல் இது என் வாழ்வில் முடிவுறா செயல் என்று கூறலாம் .


          அப்படி தேடியது பல , கிடைத்தது சில , அதில் ஒன்று இது ... கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் விபரம் முடிந்த வரை விரிவாக நான் இங்கு தருகிறேன் .


           நாடு - இந்தியா - மாநிலம் - தமிழ் நாடு - மாவட்டம் - திருப்பூர் - >திருப்பூரில் ஒரு பகுதி - அனுப்பர்பாளையம் என்னும் இடத்தில் ஒரு குடும்பத்தினர் அனைவரும் செய்து வரும் , செயல் என் கவனம் ஈர்த்தது . அவர் அவர்கள் செய்யும் தொழிலின் மூலமே இவ்வுலகிற்கு சேவை செய்யலாம் என்பதையே , இந்த சேவை உலக மக்களுக்கு ஒரு முன் உதாரணம் . இது வரை யாரும் செய்யாத ஒரு சேவை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் செய்து வரிகிறாகள் . இதில் எனக்கு ஆச்சிரியம் என்னவென்றால் இந்த குடும்பம் முழுவதும் இது சேவையல்ல இறைவனுக்கு செய்யும் பணி + கடமை என்றும் மனம் கோனாமல் ஒற்றுமையாக எல்லோரும் புண்ணைகையுடன் பணி தொடர்ந்து செய்து வரிகிறாகள் .


          இவர்களை பற்றி நிறைய தகவல்கலை சேகரித்து இந்த உலகத்துக்கு தெரியப்படத்தினால் மனிதநேயத்துக்கு ஒற்றுமைக்கும் இதுவும் ஒரு முன்வுதாரணம் கொள்ளாம் , என்று எண்ணினேன் . பல வழிகள் தேடியத்தில் இந்த இணைதளம் எனக்கு சரிதாகப்பட்டது . .



            இதில் இவர்கள் செய்து வரும் சேவைகளை ஒரு பெரிய பட்டியல் தயார் செய்ய வேண்டிய நிர்பந்தம் எனக்கு எற்ப்பட்டது . அந்த பட்டியலை கடந்த சுமார் மூன்று ஆண்டுகளாக தேடியதை தனி தனியாக பிரித்து தலைப்புகளை கொடுத்து முடிந்த வரை உங்களுக்கு விரிவாக விளக்கமாக தர நான் முயற்சி செய்துவுள்ளேன் .


             இந்த முயற்சியில் ஏதவாது தவறோ , பிழையோ இருந்தால் உங்கள் வீட்டிலில் ஒருவனாக என்னை நினைத்து மன்னித்துவிடுங்கள் . காரணம் நான் ஒரு வேறு மாநில தாய் மொழி கொண்டவன் . ஆனால் தமிழ் மொழி மீது அதிக பற்றுவுள்ளவன் என்பதை உங்களிடம் கூறி கொண்டு என்னுடைய தேடுதல் பயணம் தொடர்கிறேன் வாருங்கள் என்னுடன் சேர்ந்து தேடுதல் பயணம் செய்யலாம் . ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



              அன்புள்ளம் கொண்டவர்களே உங்களுக்கு முக்கியமான என் வேண்டுக்கொள் . இதில் குறையிருந்தால் என்னிடமும் நிறைவுயிருந்தால் பிறரிடம் கூறுங்கள்.





        %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%





                 இந்திய மண்ணில் பிறந்த ஒர் தமிழ்மகன் தான் வாழும் ஊர்ரன திருப்பூர் மாவட்டதில் தான் செய்யும் தொழில் முலம் பிறர்க்கு எந்த வகையில் சேவை செய்ய முடியும் என்று என்னிய நல் உள்ளம் என் முதல் தேடலில் கண்டேன்.

                  இன்று தன் கண் முன்னால் நட்ககும் எந்த நிகழ்வுகளை கண்டுக்காமல் செல்லும் மனிதர்களின் மத்தியில் இன்றய சமுதயத்தில் பலவகையில் ஒதுக்கப்பட்ட,கவனிப்பற்ற சாலை ஒரத்தில் மனதாள்லும், உடல் மாற்றம் உள்ளதால் பாதிக்கபட்ட மனிதர்களளுக்கு தன் குடும்பதுடன் சேவை செய்து வருகிறகள்,

திருப்பூர் மாவட்டம்


                 அனுப்பர்பாளைத்தில் சுயமாக ஆண்கள் சிகை (சாலுன்)அலங்கர கடை வைத்து நடத்தி வருகிறார் தெய்வராஜ், இன்றய விரைவு உலகில் வரும் வாடிக்கையளர்களை கவரும் வகையில் நவீன வசதி படைத்த சிகை அலங்கர நிலையங்கள் தான்அதிகம் உண்டுஇதன் மத்தியில் எளிமையுடன் தன்னுடைய் தொழிலை நடத்தி வருகிறார் தெய்வராஜ்.

                 சாலை ஒரத்தில் வாழும் மனதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் குடும்பத்துடன் சேர்ந்து சிகை ஒழுக்கம் (முடிதிருத்தம்) செய்து உணவு மற்றும் உடை வழங்கி வருகின்றனர்.
                 இவர்கள் தான் வாழும் ஊர்ரில் மட்டும் இச்சேவையை செய்யவில்லை அருகில் உள்ள் பல ஊர்களிளும் , மாவட்டங்களிளும் செய்து வருகின்றனர்.இந்த சேவை கடந்த 2000-ம் வருடம் முதல் தொடங்கப்படடு இன்று வரை தொடர்ந்து செய்து வருகின்றனர்
                  பல தன்னர்வ தொண்டு அமைப்புகள் மற்றும் பல ஊடகங்கள் இவர்களின் சேவையை பாராட்டி பல விருதுகள் வழங்கி உள்ளனர்.ஆனால் இன்று வரை அரசின் பார்வை இவர் மீது விழவில்லை என்பது வருத்தத்திர்க்குரியது.


இவரின் சேவையின் தொகுப்பை வெளியிட யாம் பெருமையடைகிறோம்

No comments:

Post a Comment